ரூபவாஹினிக்கான மின்சாரம் துண்டிப்பு: 55 லட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

🕔 January 13, 2023

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நொவம்பர் மாதத்துக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காகவே, இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் கட்டணம் 5.5 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3220 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னரும் ஒரு தடவை இவ்வாறு ரூபவாஹினிக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கட்டணம் செலுத்தவில்லை: ரூபவாஹினியின் மின் விநியோகம் ‘கட்’

Comments

புதிது பேஸ்புக் பக்கம்