தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, ரிட் மனுத் தாக்கல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு, இரு நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் இன்றைய தினம் (09) உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரங்க குணசேகர ஆகியோர் – இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் – கேர்னல் (ஓய்வு) டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: உள்ளூராட்சி தேர்தலை நடத்துவவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனு