தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு

🕔 November 26, 2022

லதா மாளிகைக்கான மின்சாரக் கட்டணமாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரால் வழங்கப்பட்ட வசதியைப் பயன்படுத்தி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மின்சாரக் கட்டணப் பிரச்சினை எழுந்ததமையினை அடுத்து, தலதா மாளிகைக்கு 2.7 மில்லியன் ரூபா கட்டணப் பட்டியல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு இதுவரை மின்சாரக் கட்டணப் பட்டியல் எதுவும் வழங்கப்பட்டதில்லை என்றும், இவ்வளவு பெரிய கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேசியமையினை அடுத்து, கட்டணத்தைச் செலுத்துவதற்கு சில ஏற்பாடுகள் செய்ததாகவும். அதன்பிறகு 1.3 மில்லியன் ரூபாவை கட்டணமாகச் செலுத்தியதாகவும் தியவதன நிலமே மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்