ராஜாங்க அமைச்சர் டயானா கமேகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீடிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்தப் பயணத்தடையை டிசம்பர் 15 வரை நீட்டித்து இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நொவம்பர் 11ஆம் திகதி அவருக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான உண்மைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதான நீதவான், ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீடித்தார்.