சரத் வீரசேகரவுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி

🕔 November 15, 2022

ணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகர, ஜனாதிபதி செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பணியாற்றவுள்ளார்.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு – சரத் வீரசேகரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments