பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு

🕔 January 12, 2016

Complaint - 975
– முஹம்மட் –

ருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) ஒருவர் தொடர்பில், பொய்யான தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப் பிரசுரத்தினால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். முகம்மட் பாயிஸ் என்பவர் மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.

மேற்படி பாயிஸ் என்பவர் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் இல்லை என்றும், அவரிடம் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டிருந்தன.

குறித்த துண்டுப் பிரசுங்களை, மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களாகப் பணியாற்றும் இரண்டு நபர்களுடன், அவர்களில் ஒருவரின் சகோதரரும் இணைந்து விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, மேற்படி நபர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான எஸ்.எல். முஹம்மட் பாயிஸ் என்பவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து முறைப்பாட்டாளரான பாயிஸ் தெரிவிக்கையில்;

“நான் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகப் படித்துப் பட்டம் பெற்றுள்ளேன். இலங்கை மருத்துவ சபையிலும் என்னை  மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகப்  பதிவு செய்துள்ளேன். என்னுடைய பதிவு இலக்கம் 2084 ஆகும்.

இந்த நிலையில், நான் ஒரு போலி மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் என்றும், நான் வழங்கும் மருத்துவ அறிக்கைகள் பொய்யானவை என்றும் தெரிவித்து, துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ள.

இந்தத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டவர்களில் இருவர் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள். இவர்களும் எனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். தொழில் போட்டி காரணமாகவே இந்த இழிவான செயற்பாட்டில் இவர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். (முறைப்பாட்டு இலக்கம்:C.I.B. 1  43/96) எனக்கும், எனது தொழிலுக்கும் அவர்கள் ஏற்படுத்திய பங்கம் தொடர்பில் மிக உச்சபட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்