தனது கட்சி எம்.பியின் கருத்துக்கு நாமல் பதிலடி

🕔 November 2, 2022

புத்திசாலிகள், படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் – குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து தான் வருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நாடாளுமுன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமணவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறினார்.

முன்னர் – சன்ன ஜயசுமண கருத்து வெளியிட்டபோது, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் நாமல் மேலும் தெரிவிக்கையில்; “அவர் கட்சியை விட்டு வெளியேறியதால், இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது வெளிப்படையானது” என்றார்.

“இவற்றினை நாம் விமர்சிக்காமல், மக்களின் பக்கம் நின்று தீர்மானங்களை எடுக்க வேண்டும்” எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பொதுஜன பெரமுனவிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் பிரிகிறது: ‘பட்ஜட்’ தோற்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிப்பு

Comments