புதிய நீர் விநியோக இணைப்புக்கான கட்டணம் 70 வீதத்தால் அதிகரிப்பு

🕔 October 18, 2022

புதிய நீர் விநியோக இணைப்புகளுக்கான கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திருத்தியமைத்துள்ளது.

புதிய குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணம் 70% உயர்த்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வரும் என நீர் வழங்கல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, நீர் பாவனைக்கான கட்டணம் அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்