தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றின் மாதாந்த மின் கட்டணம் குறித்து சபையில் தெரிவிப்பு: மாற்று நடவடிக்கை பற்றியும் யோசனை

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 லட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக நடாளுமன்றில் இன்று (20) தெரியவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தில்போது இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 லட்சம் ரூபா எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அஜித் மான்னப்பெரும இதன்போது கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் 60 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது என்றார்.

அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.