
பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் யூரியா உரத்தை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது, அவர் இதனை தெரிவித்தார்.
இலவசமாக வழங்கப்படவுள்ள 50 கிலோகிராம் யூரியா உரம் போதாமல் போகும் விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரத்தை 10,000 ரூபா என்ற மானிய விலையில் விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தவிர விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள், கிருமி நாசினிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.



