
விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இரண்டு பத்திரிகைகளில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும், அடிப்படை ஆதாரமற்றது எனவும் பூச்சிக்கொல்லி பதிவாளர் தெரிவித்துள்ளார்.
“வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கவுள்ளார்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.



