
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி 19ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அரசு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



