
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை தொடர்பு கொண்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது விடுத்த கோரிக்கையை அடுத்து இது நடந்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்த பசில் ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதியை விரைவில் நாடு திரும்ப வசதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், வேறுவிதமான ஊகங்கள் இருந்தபோதிலும், அவர் ஓகஸ்ட் 24 அன்று நாடு திரும்ப மாட்டார். அவர் வரும் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.



