
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய சபாநாயகரை மாற்றத் தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையில் – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான திட்டம் குறித்து கடந்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



