
ஜப்பானிய நிறுவனமொன்றிடம் இருந்து 200 மில்லியன் ரூபாவை லஞ்சமாகக் கோரியதாக – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துதுறை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தனிநபர் ஒருவர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, அவரின் சட்டத்தரணி சேனக பெரேராவின் ஆதரவுடன் முறைப்பாட்டாளர் எஸ்.எம். நிசார் மௌலானா இந்த முறைப்பாாட்டைச் செய்துள்ளார்.
சம்பவம் கடந்த மாதம் வெளிச்சதுக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ததோடு, இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.



