கோட்டா நாடு திரும்புவதற்கான தருணம் இதுவல்ல: ரணில் தெரிவிப்பு

🕔 August 1, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை” என்று விக்கிரமசிங்க ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் “அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் எனக்குத் தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டுத் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14 அன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியாக வருவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.

கோட்டாபய ராஜப்கஷவுடன் ரணில்விக்ரமசிங்க தொடர்ந்தும் தொடர்பு கொண்டு நிர்வாக கையளிப்பு பிரச்சனைகள் மற்றும் இதர அரசு அலுவல்களை கையாள்வதாக ஜர்னல் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்