தலைப்புச் செய்திகள்

கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

கொழும்பில் பல வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திடம் தடை உத்தரவை கோரியிருந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்றும் (08) நாளையும் (09) ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தவுள்ளது.