பெற்றோல் கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனை: வரிசைகளில் தொடர்ச்சியாக எரிபொருள் பெறுவோர் தொடர்பிலும் குற்றச்சாட்டு

🕔 July 8, 2022

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை கறுப்புச் சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன.

பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 470 ரூபாவாக உள்ள நிலையில், கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெற்றோல் 2500 ரூபா வரையில் விற்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தற்போது எரிபொருள்கள் கிட்டத்தட்ட கிடைக்காத நிலையில், லங்கா ஐஒசி நிறுவனம் மட்டுமே எரிபொருள்களை விநியோகித்து வருகின்றது.

இந்த நிலையில் நாடு முழுவதும் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டே உள்ளன.

இந்த வரிசைகளில் கறுப்புச் சந்தையில் பெற்றோல் விற்போரும் கணிசமாக உள்ளனர் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வரிசையில் நின்று தொடர்ச்சியாக எரிபொருளைப் பெறும் சிலர், அவற்றினை கறுப்புச் சந்தையில் பன்மடங்கு விலைக்கு விற்கின்றனர்.

டீசலும் இவ்வாறு பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்