
இலங்கையை விட்டு இந்த ஆண்டில் சுமார் 1500 வைத்தியர்கள் வெளியேறியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு 1500 வைத்தியர்கள் வெளியேறியிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
‘இங்கிருந்து வெளியேறும் பொருட்டு – இலங்கை மருத்துவ சபையிடமிருந்து நற்சான்றுப் பத்திரங்களைப் பெறுவதற்காக விண்ணப்பித்தோர் தொகை பின்வருமாறு அமைந்துள்ளது. ஜனவரி: 138, பிப்ரவரி: 172, மார்ச்: 198. ஏப்ரல்: 214, மே: 315. ஜூன்: 449 என, 06 மாதங்களில் மொத்தம் 1486 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்’ என, கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறை சார்ந்தவர்களும் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



