தலைப்புச் செய்திகள்

பால்மாவின் விலை மீண்டும் அதிரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 01 கிலோகிராம் பால்மாவின் விலை 2545 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் 01 கிலோ இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 950 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 400 கிராம் பால்மாவின் விலை 1020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.