
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று (18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, புதிய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் விவரங்கள் வருமாறு:
- பொது நிர்வாக, உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – தினேஷ் குணவர்தன
- கடற்றொழில் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் – ரமேஷ் பத்திரண
- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
- போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் – திலும் அமுனுகம
- நெடுஞ்சாலைகள் அமைச்சர் – கனக ஹேரத்
- தொழில் அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க
- விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் – ஜனக்க வக்கும்புர
- வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் – ஷெஹான் சேமசிங்க
- நீர் வழங்கல் அமைச்சர் – மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
- வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் – விமலவீர திஸாநாயக்க
- எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – தேனுக விதானகமனே
- ஊடகத்துறை அமைச்சர் – நாலக்க கொடஹேவா
- சுகாதார அமைச்சர் – பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன
- சுற்றுச்சூழல் அமைச்சர் – நஷிர் அஹமட்
- துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் – பிரமித்த பண்டார தென்னக்கோன்



