தலைப்புச் செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் ஊடரங்கு அமுல்: இன்று மாலை தொடங்கி திங்கள் காலை வரை

நாடு முழுவதும் இன்று மாலை 6.00 மணி முதல், திங்கட்கிழமை காலை 6.00 மணி வரையிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், நோன்புக்கான ஆயத்தங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறு தொடர்ச்சியாக இரு நாட்கள் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.