சிறையிலுள்ள ரஞ்சனுக்கு ‘மக்கள் நடிகருக்கான’ விருது

🕔 March 22, 2022

சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, SLIM People’s Awards 2022 விருது வழங்கும் விழாவில், மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

இந்த விழா நேற்று (21) இரவு கொழும்பில் நடைபெற்றது.

ரஞ்சன் ராமநாயக்க பலமுறை ‘மக்கள் நடிகர்’ விருதை வென்றுள்ளார். ஆயினும் இந்த முறை 14 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை பதிலளிக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஐக்கிய மக்கள் சக்தி, இந்த விடயத்தை கொண்டு சென்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்