தலைப்புச் செய்திகள்

முகக் கவசத்தின் விலையும் நாளை தொடக்கம் அதிகரிக்கிறது

முகக்கவசங்களின் விலையும் நாளை முதல் அதிகரிக்கக் கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தொடக்கம் முகக் கவசத்தின் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

முகக்கவச உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சேவைக் கட்டணங்களும் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

இதன்காரணமாக வறுமையில் வாழும் மக்கள் முதற்கொண்டு வசதி படைத்தவர்கள் வரையில், பாரியளவில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது முகக்கவசங்களின் விலையும் அதிகரிப்பது பொதுமக்களுக்கு மற்றொரு தலையிடியாக மாறியுள்ளது.  

பல்வேறு விலைகளில் முகக் கவசங்கள் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.