சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல்

🕔 March 14, 2022

லங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது நாட்டின் வீழ்ச்சியடைந்த நாணயக் கையிருப்பு, சரியும் நாணயப் பெறுமதி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ (Changyong Rhee), நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். அடிகல ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கையிருப்புகளை அதிகரிக்கவும் வளர்ச்சியை நிலையான பாதையில் கொண்டு செல்லவும் கூடிய சாத்தியமான வேலைத்திட்டம் தொடர்பாக, இலங்கை ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதே நாணய நிதியத்தின் உதவியைக் கோருவதில்லை என அரசாங்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்