367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம்

🕔 March 9, 2022

றக்குமதி செய்வதற்கு 367 பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருடைய அனுமதியின்றி இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஒரஞ், அவகாடோ, மீன் பாஸ்தா, நூடுல்ஸ், இறைச்சிகள், முட்டை, அப்பிள், திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

முதலாவது நடைமுறைக்கமைய, சில தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும். இரண்டாவது நடைமுறைக்கமைய, தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களை இறக்கமதி செய்ய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நடைமுறைக்கமைய சில தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கவும் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏழரை மணி நேரம் மின் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெழுகுதிரிகளை இறக்குமதி செய்வதற்கும் இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்