ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

🕔 February 22, 2022

ஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 88 தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கை இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஏப்ரல் 08, 2021 அன்று நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் சட்ட காரணங்களால் சாட்சி பதிவுகள் வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்