ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

🕔 February 20, 2022

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடை தயாரிப்புகள் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரத்தினம், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் இந்த நிகழ்வை புறக்கணித்தனர்.

இவர்களில் இரு ராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அமைச்சர் விமல் வீரவன்சவுடன் பிரச்சினைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, களஞ்சிய வசதிகள், துறைமுக விநியோக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர – ஏற்கனவே அரசாங்கத்தை பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் தங்கள் அமைச்சுக்களுக்குப் பொறுப்புகளை மாற்றுவதில் முறைகேடு செய்ததாக பல ராஜாங்க அமைச்சர்கள் குறைகூறி வருகின்றனர்.

தற்போது நாட்டில் 40 ராஜாங்க அமைச்சுக்கள் உள்ளன. அவற்றில் பல இதேபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்