ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

🕔 February 1, 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

விபத்தின்போது சம்பவ இடத்தில் மூவர் பலியாகினர். கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொரு நபர் உயிரிழந்தார்.

இறந்தவர்களில் மூவர் ஒரே குடுத்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

முச்சக்கர வண்டியின் சாரதி, அவரின் மனைவி, முச்சக்கர வண்டி சாரதியின் தந்தை மற்றும் சாரதியின் மாமியார் ஆகியோரே, விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்