அமைச்சர் ஜோன்ஸ்டன் மூன்று வழக்குகளில் இருந்து விடுவிப்பு

🕔 January 28, 2022

தொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெர்னாண்டோ மற்றும் இருவரை கொழும்பு பிரதான நீதவான் இன்று (28) விடுதலை செய்தார்.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த போது, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில், சதொச ஊழியர்களை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 153 சதொச ஊழியர்களை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்ததுடன், அமைச்சர் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அவரை மூன்று வழக்குகளில் இருந்து விடுவித்துள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் முறையான அனுமதியின்றி, இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்