
வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.



