தலைப்புச் செய்திகள்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட போது…

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர் சயனொளிபவன் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கூறினார்.

காயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இறந்தவர்களில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரும் ஒருவர் எனவும் சயனொளிபவன் தெரிவித்துள்ளார்.

அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே – இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக – உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

படங்கள்: ஊடகவியலாளர் சயனொளிபவன் பகிர்ந்திருந்த வீடியோவிலிருந்து பெறப்பட்ட ‘ஸ்கிறீன் ஷொட்’கள்