உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல்

🕔 December 24, 2021

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலாான வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வு நேற்று முன்தினம் (22) பிற்பகல் அம்பாறை மொன்டி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

‘பொதுத் தேவைகளை மதிப்பீடு செய்து வளங்களை திரட்டுதல்’ தொடர்பான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) நிறுவனத்தின் அனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் (AWF) ஊடாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே, உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான இரண்டு ‘வட்ட மேடை கலந்துரையாடல்’ நிகழ்வுகள் – கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள நிலையில், இது மூன்றாவது கலந்துரையாடலாக இடம்பெற்றது.

உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் அதிக முக்கியத்துவம் எனக் கருதும் தேவைகளை அடையாளம் கண்டு, அவை குறித்து இங்கு விளக்கமளித்தனர்.

இதன்போது, மதிப்பிடப்பட்ட தேவைகளுக்கான வளங்களைத் திரட்டுதல் மற்றும் அவற்றிலுள்ள சவால்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் வளவாளராக உள்ளுராட்சி அதிகாரி அன்பழகன் குரூஸ் கலந்து கலந்து கொண்டார்.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) சார்பாக அதன் பணிப்பாளர் நவாஸ் (country Director ) நிறுவனத்தின் பாலின ஆலோசகர் (Gender advisor) நளினி ரட்ணராஜா, சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் சகுந்தலை முத்துராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் வாணி சைமன், அந்த அரங்கின் அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர் (NGO Coordinator) ஐ.எம்.எப். இர்பான், கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் (WILL ) திட்ட இணைப்பாளர் ஜனுஷியா சுஜிதராஜ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் (WILL) எனும் திட்டத்தில், சிவில் சமூக அமைப்பின் தலைவிகளால் உள்ளுராட்சி சபைப் பெண் தலைவிகளின் திறனை மேம்படுத்துவதற்காக, மாவட்ட ரீதியில் பிரேரணை ஒன்றை தயாரிப்பதற்கான குழு ரீதியான கலந்துரையாடல், இதே தினம் காலை நிகழ்வாக மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for commom ground) நிறுவனத்தின் நிதிஅனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

இந் நிகழ்வின் இலகுபடுத்துனராக ஏ. சொர்ணலிங்கம் கலந்து கொண்டதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஷீஸ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


Comments

புதிது பேஸ்புக் பக்கம்