ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

🕔 December 9, 2021

த்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற – ரத்தினக்கற்கள் பொது ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

எனினும், ரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் மற்றும் ரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இந்த விலைக்கு இணங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதற்காகன இலங்கையின் விலை 400 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 8071 கோடி ரூபா) எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்