போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில்

🕔 December 9, 2021

– றிசாத் ஏ காதர் –

ற்போது நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; இன்று (09) கொழும்பின் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இன்று காலை – கொழும்பு நகருக்குள் நுழையும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பில் பல இடங்களுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சென்றிருந்தார்.

இதன்போது, தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

அடையாள பதாகைகள், தொழிநுட்ப உபகரணங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வினைத்திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பொலிஸ் மா அதிபருக்கு இந்த இதன்போது அமைச்சர் அறிவுறுத்தினார்.

இலங்கை விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமெராக்கள் மூலம் 9 இடங்களில் போக்குவரத்துநெரிசலை கண்காணிப்பதற்கு இலங்கை விமானப்படை வழங்கிய உதவிக்காக அமைச்சர் பாராட்டுதெரிவித்தார்.

வாகன சாரதிகளின் அநாகரீகத்தினால் அதிகரித்து வரும் வாகன நெரிசல் தொடர்பில் கடும் நடவடிக்கைஎடுக்குமாறு பொலிஸ் மா அதிபர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேல் மாகாணத்திற்குபொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அதிகாரிகள் குழுவினர்இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்