இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

🕔 October 29, 2021

லங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக முக்கிய காரணிகளில் பாரிசவாதமானது 05 ஆவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 13.7 மில்லியன் மக்கள் பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5.5 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் பாரிசவாதம் ஏற்படுவதாகவும், நோய் அறிகுறிகள் இனங்காணப்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே, உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இன்று உலக பாரிசவாத தினமாகும். இம்முறை ‘ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை நிறைவுசெய்ய இடமளியோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்