நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

🕔 December 6, 2015

ID - 0876
– எப். முபாரக் –

திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக கரையெதுங்கியவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சடலத்துடன், அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி நபரின் பெயர் பூமி துரை என்றும், இந்தியா தமிழ்நாடு காமராஜ் நகர் – கூலி மடு, சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

எனினும், சடலமாக மீட்கப்பட்டவர் இந்திய மீனவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் கிடையாதென்று பொலிஸார் சுட்டிக்காடினர்.

நிலாவெளி பகுதியில் கரையொதுங்கிய சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்