சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

🕔 October 7, 2021

சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அங்கு போத்தலினுள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருக்கும் றிஷாட் பதியுதீன் மாலை 05 மணிக்கு பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படாமலுள்ளார் என்றும் அதனால் அவர் போத்தலினுள் சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சபாநாயகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனா இவ்விடயத்தில் தலையிட்டு, நாடாளுமுன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.

எனினும், தற்போதைய ஆளுந்தரப்பினர் எதிரணியில் இருந்தபோது, இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்று ஆளுந்தரப்பினர் இதற்கு பதிலளித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தாங்கள் சிறையில் இருந்தபோது மாலை 05 மணிக்குப் பிறகு, தாங்கள் கூட போத்தல்களில் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கூறியுள்ளார்.

Comments