உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

🕔 October 6, 2021

லகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர்கிரீன் ஏஸ்’ (Evergreen Ace) கப்பல், நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மாத்திரமே இந்தக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் கூட இந்த பாரிய கொள்கலன் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தக் கூடிய வசதிகள் இல்லை.

இந்த கப்பலானது 400 மீட்டர் நீளமும், 65 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

நெதர்லாந்தின் துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பலானது 16 நாட்கள் கடந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

24 ஊழியர்களுடன் வந்துள்ள இந்தக் கப்பல் இன்று நள்ளிரவு வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்