அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

🕔 October 6, 2021

சாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் அதன் செயலாளர் பீ. ஹரிசன் ஆகியோர் இன்று (06) முற்பகல் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்