நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

🕔 September 23, 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டில் செயற்திறன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு;

  1. டிரான் அலஸ்
  2. அலி சப்ரி ரஹீம்
  3. மர்ஜான் பளீல்
  4. நிபுண ரணவக்க
  5. ஆர். சம்பந்தன்
  6. குலசிங்கம் திலீபன்
  7. சாரதி துஷ்மந்த
  8. உதயகாந்த குணதிலக
  9. எம்.எஸ். தௌபீக்
  10. அப்துல் ஹலீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்