‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம்

🕔 September 15, 2021

கொவிட் நோயாளிகளிடையே இதுவரை மூன்று பிரதேசங்களில் இதுவரை ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்படடுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, குருணாகல் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இவ்வாறு ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரிய தொற்றான இந்தக் ‘கறுப்பு பூஞ்சை’யானது, குணமடைந்த மற்றும் குணமடைந்து வரும் கொவிட் நோயாளர்களிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் நோயாளர்களிடமும் இந்த ‘கறுப்பு பூஞ்சை’ கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இன்று (15) ஊடகங்களிடம் கூறினார்.

கடுமையான இந்தத் தொற்றானதுமூக்கு, கண்களிலும், சில நேரங்களில் மூளையையும் பாதிக்கின்றது. சுற்றுச்சூழலிலுள்ள ஒரு பூஞ்சையால் (பங்கஸ்) ஏற்படும் இந்தத் தொற்று, பெரும்பாலும் நோயெதிப்பு சக்தி குறைந்தவர்களையே பாதிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர்; நீரிழிவு போன்ற தொற்று அல்லாத நோய்கள் உள்ளவர்களுக்கு ‘கறுப்பு பூஞ்சை’ தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்