ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

🕔 September 13, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவரின்ட பெயர் அடங்கிய ஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், கெட்டகொடவின் பெயர் அடங்கிய ஆவணத்தை இன்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர், ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என, தேர்தல் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Comments