கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

🕔 September 13, 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று (13) நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் பதவி விலகுவதால் ஏற்படும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக ஜயந்த கெடகொட நியமிக்கப்படவுள்ளார்.

ஏற்கனவே, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜயந்த கெடகொட, தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பளித்து, தனது உறுப்புரிமையிலிருந்து விலகினார்.

இதேவேளை, பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் வியாழக்கிழமை (16) ஆம் திகதி, மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்