மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு

🕔 September 10, 2021

த்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார்.

இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) இணைவதற்கான வாய்ப்பை பேராசிரியர் லக்ஷ்மன் பெற்றுள்ள போதும், அந்த சந்தர்ப்பத்தினை ஏற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 15 வது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூடி லட்சுமன், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியகமிக்கப்பட்டார்.

80 வயதான பேராசிரியர் லக்ஷ்மன், 1994 முதல் 1999ஆம் ஆண்டு வரை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய பிரபல பொருளாதார நிபுணர் ஆவார்.

கல்வித் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக 2005ஆம் ஆண்டு அவருக்கு ‘தேசமான்ய’ பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வெற்றிடமாகும் மத்திய வங்கி ஆளுநர் பதவியை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஏற்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்