முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

🕔 September 1, 2021

நாட்டில் தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (01) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர்; இது தனது தனிப்பட்ட கோர-ிக்கை என்றும் கூறினார்.

இதன்போது ராஜாங்க அமைச்சர்; ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே நடத்திய ஆராய்ச்சியிலுள்ள உண்மைகளையும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாவட்டத்துக்குள் 14% கோவிட் நோயாளிகள் அதிகரித்திருப்பதை குறித்த ஆராய்ச்சி நிரூபித்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சுதர்ஷினி, ஆயினும் இந்த எண்ணிக்கை சமூகத்தில் குறைந்தது 09 மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

“கொரோனா வைரஸின் டெல்டா பிரழ்வின் பரவலான அதிகரிப்பு காரணமாக, தற்போது எத்தனை தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்று சொல்ல முடியாது” என்றும் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே மேலும் கூறினார்.

ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம், நாடு முழுவதும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதித்தது. பின்னர் வைரஸ் வேகமாக பரவுவதால் அந்த உத்தவு செப்டம்பர் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்