சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

🕔 August 22, 2021

மையல் எரிவாயுவை நாளை முதல் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர், லிற்றோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த நிறுவனங்கள் வசமுள்ள கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அவதானித்தனர். இதன்படி எதிர்காலத்தில் தட்டுப்பாடின்றி எரிவாவை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை லாப் பேகஸ் நிறுவனம் தற்போது புதிய விலைக்கமைவாக எரிவுவை சந்தைக்கு விநியோகிக்கிறது.

எனினும், லிற்றோ நிறுவனம் விலையில் மாற்றம் செய்யாது அதனை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்