நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

🕔 August 17, 2021

கில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

ஏற்கனவே ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 13ஆம் திகதி கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதி செய்யயப்பட்டிருந்தது.

இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர – சில தினங்களுக்கு முன்னர் கொவிட் பாதிப்புக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தொடர்பான செய்தி: மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்