ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு

🕔 August 13, 2021

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தன்னை தனிமைப்படுத்திய பின்னர் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தான் கொவிட் தொற்றுக்கு ஆளாயுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை தனது நெருங்கிய சகாக்காள் தம்மைத் தனிமைப்படுத்தி பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 14 நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்