மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை, ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி

🕔 August 12, 2021

ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த தனது ஒரே மகனின் திருமண வரவேற்பை ரத்துச் செய்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த திருமண வரவேற்பு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அமைச்சரின் மகனுடைய திருணம் – தேவாலயமொன்றில் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நெருங்கிய உறவினர்களின் பங்கேற்புடன் ஒரு சிறிய நிகழ்வாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணங்களில் விருந்தினர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. திருமண நிகழ்வில் 150 பேர் வரை கலந்து கொள்ள முடியும் எனும் அரசாங்கத்தின் அறிவிப்பு பின்னர் 50 பேர் ஆகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்